சினிமாவெள்ளித்திரை

சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன் படம்!

சர்வதேச திரைப்பட விழா

விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் கடந்த ஜூன் மாதம் வெளியான திரைப்படம் மாமனிதன். இப்படத்தில் காயத்ரி, குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஒய்.எஸ்.ஆர் நிறுவனத்தின் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் ஏற்கனவே டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த ஆசியப்படத்திற்கான விருதையும், பூடான் நாட்டில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் 4 விருதுகளையும் பெற்றது.

இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக மாமனிதன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Related posts