வைரல் வீடியோ
உயிர், மிருகம் படங்களை இயக்கிய சாமி இயக்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலாபால். அதனைத்தொடர்ந்து மைனா, தெய்வதிருமகள், ராட்சசன் போன்ற படங்களின் மூலம் தமிழில் பிரபலமானார். இவர் நடிப்பில் அண்மையில் ஓடிடியில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், நடிகை அமலாபால் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். இவர் தனது நீச்சல் உடை புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Escape the ordinary 💫#beach #beachbum #vacation #maldives pic.twitter.com/98XnA3N5en
— Amala Paul ⭐️ (@Amala_ams) October 1, 2022