அரசியல்கல்விதமிழ்நாடு

பாடப்புத்தகத்தில் ஒன்றிய அரசா ? – கொந்தளித்த வானதி சீனிவாசன்!

பாடப்புத்தகத்தில் ஒன்றிய அரசா ? – கொந்தளித்த வானதி சீனிவாசன்!

தமிழக பாடப்புத்தகத்தில் மத்திய அரசு என்ற வார்த்தையை நீக்கி விட்டு ஒன்றிய அரசு என்று மாற்ற போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு

கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியே அமைத்து திமுக கட்சி. ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலே மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சிக்க தொடங்கியது. அதிலும் முக்கியமாக ‘மத்திய அரசு’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘ஒன்றிய அரசு’ என்ற வார்த்தையே பயன்படுத்தியது திமுக அரசு. மேலும், திமுக ஆதரவாளர்களும், திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே குறிப்பிட்டனர். தமிழக அரசின் சார்பாக எழுதப்பட்டும் கடிதங்களிலும், வெளிட்டப்படும் அறிக்கைகளிலும் ஒன்றிய அரசே என்றே குறிப்பிட்டனர்.

ரோஜா குணம்

இதற்கு முதலில் பாஜகவை சார்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பாஜகவை சேர்ந்த அனைவரும் தங்களத்தின் கண்டனங்களையும் சட்டமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால் சில நாட்களுக்கு பிறகு பாஜக யாரு எவ்வாறு அழைத்தாலும் மத்திய அரசுக்கு எந்த ஒரு பங்கமும் இல்லை. ரோஜாவை வேற பெயர் சொல்லி அழைத்தாலும் ரோஜாவின் குணம் மாறப்போவதில்லை. அதுபோல ஒன்றிய அரசு என்று அழைத்தாலும் இந்திய சட்டயமைப்பின் படி மத்திய அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை குறைக்கப்போவதில்லை என்றனர்.

வானதி சீனிவாசன் கண்டனம்

இதனை தொடர்ந்து தற்போது தமிழக பாடப்புத்தகத்தில் இருந்து மத்திய அரசு என்ற வார்த்தையை நீக்கி விட்டு ஒன்றிய அரசு என்று மற்ற போவதாக தகவல் வந்துள்ளன. அதுமட்டுமின்றி ஆளுநர் அதிகாரத்தை குறித்து இருந்த பகுதிகளையும் தமிழக அரசு நீக்கியுள்ளதாக செய்தியும் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் இந்த செய்திகளை யாரும் உறுதி செய்யவில்லை.

இதற்கு கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், ‘தமிழகத்தில் திமுக ஆட்சி அதிகாரத்தை தவறா பயன்படுத்துகின்றனர். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதன் மூலம் பிரிவினை சித்தாந்தத்தை மக்களிடையே திமுக அரசு விதைக்கிறது.

பிஞ்சிகள் மனதில் நஞ்சி

திமுகவின் பிரிவினைவாத நோக்கத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதேசமயம், திமுக அரசு அரசியல் விளையாட்டை அரசியலோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். பிஞ்சிகள் மனதில் நஞ்சை விதைப்பது நல்லதல்ல. பாடப்புத்தகத்தில் மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என மாற்றுவது மிகவும் கண்டனத்துக்குரியது.

இது திமுகவின் அரசியல் அதிகார ஆணவத்தை காட்டுகிறது. திமுக தங்களின் பிரிவினை சித்தாந்தத்தை கைவிட்டுவிட்டு, தமிழக மக்களுக்கு பொதுவாகவும், அவர்களின் நலனுக்காவும் செயல் பட வேண்டும். மேலும், பாடப்புத்தகத்தில் மாற்றங்களை கொண்டுவரும் எண்ணத்தை உடனே கைவிடவேண்டும்’ என்று வானதி சீனிவாசன் கூறினார்.

Related posts