அரசியல்இந்தியா

மசூதிகளில் ஒலிப்பெருக்கிகளை அகற்றவில்லை எனில் ஹனுமன் சாலிஸா அதீத சத்தத்துடன் பாடப்படும் – ராஜ் தாக்கரே

நவநிர்மன் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளுக்கு வெளியே உள்ள ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு மகாராஷ்டிரா அரசுக்கு சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தது கடும் கண்டனத்திற்கு உள்ளானது.

ராஜ் தாக்கரே இந்த விவகாரம் குறித்து பேசியது மேலும் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. “ இது மதப் பிரச்சினை அல்ல, சமூகப் பிரச்சினை” என்றும், ஒலிபெருக்கி வசதிகளை வெளியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ராஜ் தாக்கரே,

“மசூதிகளில் மட்டுமல்ல, பல கோவில்களிலும் சட்டவிரோத ஒலிபெருக்கிகள் இயங்குகின்றன. இது ஒரு மதப் பிரச்சினை அல்ல, சமூகப் பிரச்சினை என்பதை நான் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளேன். நான் பிரார்த்தனைக்கு எதிரானவன் அல்ல, ஆனால் உங்களுக்கு ஏன் ஒலிபெருக்கிகள் மற்றும் மைக்குகள் தேவைப்படுகிறது? உங்கள் பிரார்த்தனைகளை ஏன் எங்களை கேட்க வைக்கிறீர்கள்?

மும்பை காவல்துறை ஒரு சில மசூதிகளுக்கு மட்டுமே ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது, ஆனால் பெரும்பாலான மசூதிகள் முறையான அனுமதி பெறாமல் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்துகின்றன.

ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை மீறியதாகக் கூறப்படும் மசூதிகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று குற்றம் சாடினார்.

மசூதிகளுக்கு வெளியே ஒலிபெருக்கிகளின் பயன்பாடு தொடர்ந்தால், அவரது கட்சியினர் ஹனுமான் சாலிசாவை இரண்டு மடங்கு அதிகமாக வாசிப்பார்கள் என்று எச்சரித்தார் ராஜ் தாக்கரே.

 

 

Related posts