புதிய அப்டேட்
தனுஷ் நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’. இதில் நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க, தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் இதன் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ‘வாத்தி’ படத்தின் ‘நாடேடி மன்னன்’ எனும் இரண்டாவது பாடலின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

