சினிமாவெள்ளித்திரை

டப்பிங் பணியை நிறைவு செய்த சிம்பு படக்குழுவினர்!

டப்பிங் பணி

கன்னட மொழியில் வெளியான ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்து தல’. இதில் சிம்பு , கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

இந்நிலையில், ‘பத்து தல’ படத்தில் தனது டப்பிங் பணிகளை நடிகர் கௌதம் கார்த்திக் நிறைவு செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts