Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அறிவியல்»சுருங்கி விரியும் பிரபஞ்சம்! – வியக்க வைக்கும் அறிவியல் தகவல்கள்

சுருங்கி விரியும் பிரபஞ்சம்! – வியக்க வைக்கும் அறிவியல் தகவல்கள்

May 29, 20222 Mins Read24 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

எந்த ஒரு வெடிப்பு நிகழ்ந்தாலும், வெடித்துச் சிதறும் பொருட்கள் வேகமாக நாலாப்பக்கமும் பரவலாக சென்று விழுவதைக் கண்டுள்ளோம். அவ்வாறு விழுவதற்குக் காரணம் பூமியின் ஈர்ப்புவிசை. ஈர்ப்புவிசை இல்லாத வெளியில் இந்த வெடிப்பு நிகழுமேயானால் என்னவாகும்?

வெடித்துச் சிதறும் பொருட்கள் வெடிப்பின் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்; கீழே விழாது. வேறு ஏதாவது ஒரு சக்தி தடுத்து நிறுத்தாவிட்டால் வேகமாய் செல்லும் பொருள் அதன் வேகத்தில் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கும்.

வெளியில் நாம் ஒரு கிரிக்கெட் பந்தை மட்டையால் அடித்தால் அந்த பந்து சென்று கொண்டே இருக்கும்; விழவே விழாது. சிக்செர் எல்லாம் தாண்டிச் சென்றுவிடும். வேறு யாராவது அடித்த வேறு ஒரு பந்து, நாம் அடித்த பந்தின் அருகில் வந்தால் இரண்டு பந்தும் ஒன்றை ஒன்று இழுத்துக்கொண்டு இணைந்துவிடும். ஏனென்றால் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா பொருட்களுக்கும் அதனதன் நிறைப்படி ஈர்ப்புவிசை இருக்கின்றது.

சூரியன் உருவாகியவுடன் ஏற்பட்ட அதிபயங்கர வெடிப்புடன் உண்டான புகையும், தூசும் இப்படிதான் தூக்கி எறியப்பட்டு சூரியனைச் சுற்ற, அவை ஈர்ப்பு விசையால் இணைந்து தான் இந்த பூமியும் மற்ற கோள்களும் உருவாகின.

இதையும் படிக்க :  RAM என்றால் என்ன? அதன் வகைகளும் பயன்களும்

மா வெடிப்பிற்குப் பிறகு விரிவடைந்த பிரபஞ்சத்தின் வெடிப்பு வேகம் குறையும்.

பிரபஞ்சத்தில் இருக்கும் நட்சத்திரங்கள், பால்வெளி மண்டலம் போல உள்ள எண்ணற்ற மண்டலங்களின் ஈர்ப்பு விசையினால் மீண்டும் ஒன்றையொன்று இழுத்துக்கொண்டு சுருங்கும்.

தொடங்கிய நிலைக்கே வந்துவிடும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்த்தனர்.

Big Crunch :

அதனை மா சுருக்கம் (Big Crunch) என்று அழைத்தனர். மாவெடிப்பு ஏற்பட்டு 1300 கோடி ஆண்டுகள் ஆனதனால் விரிவாக்க வேகம் குறைந்து ஈர்ப்பு விசையினால் இந்த சுருக்கம் ஆரம்பித்திருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதினர்.

ஆனால் அதிநவீன தொலைநோக்கியில் பிரபஞ்சத்தின் விரிவு வேகம் குறையவில்லை என்றும், மாறாக பிரபஞ்சம் வேகமாய் விரிவடைவதை கண்டறிந்தபோது விஞ்ஞானிகள் ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார்கள்.

இந்த வேகத்தில் விலகிச் சென்றுகொண்டிருந்தால் ஈர்ப்பு விசை வலுவிழந்துவிடும். அதன் விளைவு மிகவும் வித்தியாசமாக இருக்கும்.

அதாவது நம்மைச் சுற்றி உள்ள பொருட்கள் எல்லாம் பூமியிலிருந்து மேலே எழுந்து முதலில் மிதக்க ஆரம்பிக்கும்.

இதையும் படிக்க :  யார் இந்த பசுமைப் போராளி?

எல்லாப் பொருட்களும் அணு அணுவாகப் பிரிந்து வெளியில் விலகிச் சென்றுவிடும். மனிதர்களும், விலங்குகளும் விதிவிலக்கல்ல. ஏனென்றால் ஈர்ப்புவிசை தான் இவையனைத்தையும் இழுத்து இணைத்து வைத்திருக்கின்றன.

முன்னர் கூறியதுபோன்று சூரிய குடும்பத்தில் உள்ள எல்லா கிரகங்களும் சூரியனை விட்டுப் பிரிந்து சென்றுவிடும்.

விரிவாக்க வேகம் தொடர்ந்து நடந்துகொண்டே இருந்தால் பிரபஞ்சம் அழியும் என்ற கோட்பாட்டை பல விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மற்றொரு கோட்பாடு பிரபஞ்சம் தோன்றி விரிவடைதாலும், பின்னர் சுருங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளினால் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது என்று கூறுகின்றது.

இவை இரண்டும் இணைந்தே இருப்பதற்கான வாய்ப்பும் இருக்கலாம் அல்லவா?

பிரபஞ்சம் கருந்துளைகள் மூலமாக பல புதிய பிரபஞ்சங்களை உண்டாக்குகின்றது. பூமியில் உயிரினங்கள் எப்படி பெருகுகின்றனவோ அதேபோல பிரபஞ்சமும் பெருகுகின்றன என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பிரபஞ்சத்தின் தோற்றம், வளர்ச்சி, அழிவு பற்றி ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் பல தடைகற்களைக் கடந்து அனைத்து உண்மைகளையும் மனித குலத்திற்கு வெற்றிகரமாக வழங்குவார்கள்.

big bang theory Black holes contraction expansion featured science space universe
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதேன் நிலவு என்ற சொல் எவ்வாறு உருவானது தெரியுமா ?
Next Article போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்வதின் அவசியம் என்ன?

Related Posts

அறிவியல்

“மக்களை ஏமாற்றிய திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது” – பழனிசாமி ஆவேசம்

March 9, 2026
Editor's Picks

ஒரு கவுன்சிலர் கூட இல்லாத தவெகவுடன் எங்களை ஒப்பிடக்கூடாது – நயினார் நாகேந்திரன்

November 27, 2025
Editor's Picks

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் 5ம் தலைமுறை போர் விமானம்

November 24, 2025
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,487 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,998 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,966 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.