அரசியல்உலகம்தமிழ்நாடு

போர் சுழலுக்கு மத்தியில் நேட்டோ மாநாட்டில் பங்கேற்கும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி !

கடுமையான போர் சூழலிலும் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் நேட்டோ மாநாட்டில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கலந்து கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

நேட்டோ மாநாடு

ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான மாட்ரிட்டில் நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு ஜூன் 28 மற்றும் 29ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் முறையான பசிபிக் நாடுகளை சேர்ந்த நேட்டோ உறுப்பினர்களான ஆஸ்திரேலியா, தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளனர்.

US

பொது செயலாளர் மிர்சியா ஜோவானே

இதுதொடர்பாக நேட்டோ அமைப்பின் துணை பொது செயலாளர் மிர்சியா ஜோவானே கூறுகையில் நேட்டோ அமைப்பை விரிவுபடுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை நடைபெற்று வருகிறது. பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகள் அமைப்பில் சேரவுள்ளனர். உக்ரைன் குறித்து விரைவில் முடிவுகள் எடுக்கப்படும். உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார் என கூறியுள்ளார்.

NATO

நேட்டோவில் உக்ரைன்

இதற்கு முன்னதாக நேட்டோ அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு ப்ருசேல்ஸ் வரும் ஜூன் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் ஜார்ஜியா பின்லாந்து, ஸ்வீடன் மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாட்டை இணைப்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோவியத் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகளை இணைத்து உருவாக்கப்பட்ட அமைப்புதான் நேட்டோ. இந்த நேட்டோ அமைப்பில் ரஷ்யாவின் எதிர்ப்பை மீறி உக்ரைன் நாடு தன்னை இணைக்க முயற்சித்து வருகிறது.

Ukraine war

உக்ரைன் மீது ரஷ்யா போர்

இதற்கு எதிராக ரஷ்யா கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் உக்ரைன் மீது போர் அறிவித்து ராணுவ தாக்குதல் நடத்தில் வருகிறது. இந்த போர் ஓயாத நிலையில், சுமார் 1.4 கோடி உக்ரைன் மக்கள் போர் காரணமாக தங்கள் இருப்பிடத்தை மாற்றிய அவல நிலை ஏற்பட்டது. இதனை ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்திருந்தது. அத்துடன் 1.57 கோடி மக்கள் நீர், மின்சாரம் போன்ற அடிப்படை தேவையின்றி தவிக்கின்றனர். இந்த போருக்குப் பின்னர் பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளும் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

Related posts