அரசியல்உலகம்

இன்று எலிசபெத் ராணியின் இறுதிச்சடங்கு !

இன்று காலை நடைபெற்ற எலிசபெத் ராணியின் இறுதிச்சடங்கில் 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

இறுதிச்சடங்கு

இங்கிலாந்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல்நல குறைவு காரணமாக கடந்த 8ம் தேதி காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து கடந்த 13-ம் தேதி ராணியின் உடல் ஸ்காட்லாந்தில் இருந்து இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் எலிசபெத் ராணியின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

விமானங்கள் ரத்து 

ராணியின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மாளிகையில் இருந்து கொண்டு செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு வந்து செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

 

Related posts