Editor's Picksதமிழ்நாடு

திருநெல்வேலியில் கல்குவாரி விபத்து 3 பேர் பலி – உரிமையாளர்கள் கைது !

நெல்லை மாவட்டம், முன்னீர்ப்பள்ளம் அடுத்த அடைமதிப்பான் குளம் என்ற கிராமத்தில் உள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியுள்ள ஆறு பேரை மீட்க்கும் பணி நடந்துகொண்டு இருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்ப்பள்ளம் அடுத்த அடைமதிப்பான் குளம் கிராமத்தில் உள்ள வெங்கடேஷ்வரா என்ற தனியருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. கடந்த 14ம் தேதி அன்று இரவு குவாரிக்குள் ஊழியர்கள் கற்களை அல்லும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தன. அப்போது திடீர் என்று பாறை சரிந்து விழுந்ததில் டிரைவர்கள் செல்வகுமார், ராஜேந்திரன், ஹிட்டாச்சி ஆப்ரேட்டர்கள் செல்வம், முருகன், விஜய் மற்றும் லாரி கிளீனர் முருகன் ஆகிய ஆறு பேரும் கல் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிர்க்கு போராடி கொண்டு இருந்தனர்.

மீட்பு படைனர்

இதையடுத்து, பாளையங்கோட்டை மற்றும் நாங்குநேரியில் இருந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு இரவு முழுவதும் மீட்பு பணி நடைபெற்றது.
பின்னர் கிட்டாச்சி ஆப்ரேட்டர்கள் முருகன் மற்றும் விஜய் உயிருடன் பத்திரமாக மீட்க பட்டனர். அவர்கள் இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர்.


இந்நிலையில், ‘விபத்து நடைபெற்றபோது இருட்டாக இருந்ததால் கற்கள் சரிந்து விழுந்தது எங்களுக்கு தெரியவில்லை’ என்று விபத்தில் உயிர் பிழைத்த விஜய் தெரிவித்தார். மேலும், ‘ஆறு பேர் இருந்தோம் இப்போது மூன்று பேர் தான் உயிரோடு இருக்கின்றோம் ராஜேந்திரன், செல்வம், முருகன் இறந்துவிட்டார்கள்’ என்று கதறி அழுதார் விஜய்.

பொது மக்கள் சாலை மறியல்

இதற்கிடையே, குவாரி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து அறிந்த பொன்னாக்குடி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குவாரி குறித்து போலீசார் விசாரித்தபோது, காங்கிரஸ் பிரமுகர் சேம்பர் செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான குவாரி என்பதும் அதே சமயம் ஆவணப்படி சங்கரநாராயணன் என்பவர் பெயரில் தான் இந்த குவாரி இயங்கி வருவதும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதையடுத்து, போலீசார் சங்கர நாராயணனை கைது செய்தனர். மேலும், செல்வராஜியிடம் விசாரித்து வருகின்றனர். ‘சட்டத்துக்குப் புறம்பாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக குவாரியில் கற்கள் அள்ளுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என மாவட்ட அட்சியர் விஷ்ணு எச்சரித்துள்ளார். விபத்தில் 3 நபர்கள் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts