‘கமல் ஹாசனை வைத்து படம் எடுக்க வேண்டும்’ என்று இயக்குனர் பா.ரஞ்சித் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது கூறியுள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித்
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவியாளராக இருந்தவர் பா.ரஞ்சித். 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தார். இவர் தனது படங்களில் தொடர்ந்து தலித் அரசியலை பேசி வருகிறார். மேலும், இவர் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு, ரைட்டர் போன்ற சில தமிழ் படங்களை தயாரித்தும் உள்ளார். இதனிடையே சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இவர் ஏற்கனவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினியை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் பா.ரஞ்சித் நடிகர் கமல் ஹாசனை வைத்தும் ஒரு படம் இயக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இசை வெளியிட்டு விழா
மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் விக்ரம். படத்தில் கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்து, கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது. படம் அடுத்த மாதம் 3ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
விஜய்சேதுபதியின் ஆசை
அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், அக்ஷரா ஹாசன், விஜய்சேதுபதி, நரேன், காளிதாஸ் ஜெயராம், உதயநிதி ஸ்டாலின், நடிகர் சிம்பு, பார்த்திபன், இயக்குநர் ரவிக்குமார், இயக்குநர் பா.ரஞ்சித் எனப் பலரும் கலந்துகொண்டனர். அதில் விஜய் சேதுபதி மேடையில் பேசும் போது கமல் சார் படத்தில் நடித்து விட்டேன். மேலும், கமல் சார் இயக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என்று தனக்கு ஆசை இருப்பதாகவும் கூறியிருந்தார்.
கமலின் அடுத்த படம்
இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசும்போது மதுரையைக் களமாக கொண்ட ஒரு கதையை கமலை வைத்து இயக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் பா.ரஞ்சித் கமலின் அடுத்த படத்தை இயக்க போவதாக ரசிகர்கள் சமுகவலைதலங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.