Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

January 7, 2026

ஆளுநரிடம் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளித்த எடப்பாடி பழனிச்சாமி

January 6, 2026

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள்

January 6, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, January 24
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»இந்தி மொழி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது – ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!

இந்தி மொழி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது – ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு!

April 18, 20222 Mins Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் இந்தி மொழி விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று குற்றம் சாட்டினார். அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியைப் பயன்படுத்துங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியது இந்தியாவின் ஒற்றுமையை களைய வைக்கும் செயல். ‘ஒற்றை மொழி என்பது ஒற்றுமைக்கு உதவாது; ஒருமைப்பாட்டையும் உருவாக்காது’ என்றுகூறி தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் தனது நிலைப்பாட்டை உறுதிபடத் தெரிவித்திருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

ஆனால், இன்றைக்கு மொழிப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு அறிக்கை விடும் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவையில் தனது பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்துகுறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என நழுவிக் கொண்டதை மட்டும் ஏன் மறந்துவிட்டார்? உண்மையான தமிழ் உணர்வும், அக்கறையும் இருக்குமானால் பழனிசாமியின் இந்த செயலைத்தான் ஓ.பன்னீர்செல்வம் கண்டித்திருக்க வேண்டும்.அதைவிடுத்து, முதல்வர் மீது உள்நோக்கத்தோடு பேசுவது கண்டனத்துக்குரிய செயலாகும். உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் தோற்றுவிப்பது குறித்தும் தனது அறிக்கையில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க :  பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க ஸ்டாலின் - அஇஅதிமுக

ஜெர்மனியில் உள்ள கொலோன்பல்கலைக்கழகத் தமிழ் துறைக்கு ரூ.1.25 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் கருணாநிதி பெயரில் செம்மொழித் தமிழ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் முதல்வர் பேசும்போது, ‘‘செம்மொழி சிறப்புகளை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் வகையில் முதல்கட்டமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் செம்மொழித்தமிழ் இருக்கைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்று அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்ல, தமிழின் தொன்மையையும் பெருமையையும் உலகளாவிய வகையில் எடுத்து செல்லும் வகையில், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கி, தொல்லியல் துறையில் ஒரு மறுமலர்ச்சியை முதல்வர் உருவாக்கியிருக்கிறார்.

இதையும் படிக்க :  காமராஜர் பிறந்தநாள் : மோடி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து !

இத்தகைய ஆய்வு முடிவுகளையும், அதன் சார்ந்த அறிவிப்புகளையும், சமூகநீதி சார்ந்த முன்னெடுப்புகளையும், தமிழ்கூறும் நல்லுலகையும், ஆய்வு நெறி சார்ந்த அறிஞர்களையும் இந்திய அளவில் பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்து, இணையத்தில் வெளியிட்டுள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளை தவிர்த்து பிறநூல்கள் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, அன்றைய முதல்வர் எடப்பாடி. பழனிசாமி அவர்களால் 19-02-2019 அன்று வெளியிடப்பட்டதை ஓ.பன்னீர்செல்வம் மறந்திருந்தாலும், இத்தகைய அறிக்கைகளை வெளியிடும் முன்பு தனது பழைய நண்பரான, அன்றைய தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சரிடமாவது கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

#hindiopposition #thangamthennarasu amit shah CM stalin ops
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வாழ்க்கை வரலாறு
Next Article காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தென்கலை வடகலை பிரிவினர் மோதல் – பக்தர்கள் அதிருப்தி!

Related Posts

2026 தேர்தல்

NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

January 7, 2026
Editor's Picks

ஆளுநரிடம் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளித்த எடப்பாடி பழனிச்சாமி

January 6, 2026
Editor's Picks

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள்

January 6, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,226 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,915 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,893 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,226 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,915 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,893 Views
Our Picks

NDA கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

January 7, 2026

ஆளுநரிடம் திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை அளித்த எடப்பாடி பழனிச்சாமி

January 6, 2026

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த நீதிபதிகள்

January 6, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.