Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, June 13
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ‘மாபெரும்’ கிரிக்கெட் போட்டி!

ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் ‘மாபெரும்’ கிரிக்கெட் போட்டி!

February 22, 20262 Mins Read21 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் அதிமுக மாநகர தெற்கு பகுதி, 39வது வட்டம் சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி இன்று துவங்கியது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 78 ஆவது பிறந்தநாள் வரும் 24 ஆம் தேதி அன்று கொண்டாடப்படவுள்ளது. அன்றைய தினம் மாவட்ட அளவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க அதிமுக திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, இன்னும் ஓரிரு மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. இதனால், இந்த முறை ஜெயலலிதாவின் பிறந்தநாளை மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கொண்டாட கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், அதிமுக தலைமை செயலகம் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில், ‘ஜெயலலிதாவின் பிறந்த நாளான 24.2.2026 அன்று, அவரது நினைவுகளை நெஞ்சில் சுமந்துள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில் ஆங்காங்கே கழக கொடிக் கம்பங்களுக்கு புதுவர்ணம் பூச வேண்டும். கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்து கழகக் கொடியினை ஏற்ற வேண்டும்.

இதையும் படிக்க :  கொசுவத்தியால் நேர்ந்த கொடூரம்: கூடுவாஞ்சேரியில் 2 வயது குழந்தை உட்பட 3 பேர் தீயில் கருகி உயிரிழப்பு

தத்தமது பகுதிகளில் ஆங்காங்கே அவருடைய திருஉருவச் சிலைகளுக்கும், அவரது படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். கண் தானம், ரத்த தானம் செய்தல்,மருத்துவ முகாம் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும்.

மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், இலவச திருமணங்களை நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், வேஷ்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத் திட்ட உதவிகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.’ என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிக்க :  செருப்பை தலையில் தூக்கி சுமந்த சமூகத்தினரை மேயராக்கியது தான் திராவிட மாடல் - திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு !

இந்நிலையில், அதிமுக காஞ்சிபுரம் மாநகர தெற்கு பகுதி, 39வது வட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவலர் மைதானத்தில் மாபெரும் கிரிக்கெட் போட்டி துவக்க விழா இன்று நடைபெற்றது. அதிமுக காஞ்சிபுரம் மேற்கு பகுதி இளைஞர் அணி செயலாளர் ஆனந்தபாபு ஏற்பாட்டின் பேரில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டியை முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளருமான வி.சோமசுந்தரம் துவக்கி வைத்தார். 16 அணிகள் பங்குபெறும் இப்போட்டியில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.3 ஆயிரமும் மற்றும் கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

கிரிக்கெட் போட்டியின் துவக்க விழாவில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சிறுவாக்கம் ஆனந்தன், மாவட்ட மாணவரணி செயலாளர் திலக் குமார், பகுதி கழக செயலாளர் கோல்டு ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘டெல்லி டூ மீரட் இனி 55 நிமிடம் தான்’ நாட்டின் அதிவேக மெட்ரோ ரயில் சேவையான ‘நமோ பாரத்’ தொடக்கம்
Next Article ஆம்பூரில் பரபரப்பு… வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்!

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,618 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,048 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,618 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,048 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,996 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.