ரத்லம் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
ரெயில் தடம் புரண்டது
மத்தியப்பிரதேச மாநிலம் ரத்லம் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 9.30 மணியளவில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெளியேறி நின்றது. நல்லவாய்ப்பாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டதால் அங்கு ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அங்கு நிவாரண ரெயில் அனுப்பப்பட்டது. இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு உதய்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இலக்கை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தது. ரெயில் தடம் புரண்டது தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

