விக்ரம் – பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் சீயான் – 61 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
சீயான் – 61
பொன்னியின் செல்வன், கோப்ரா படங்களை அடுத்து நடிகர் விக்ரம், பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பணிகள் இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த திரைப்படத்திற்கு மைதானம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
இதன்மூலம் இயக்குனர் பா.ரஞ்சித், ஜி.வி.பிரகாஷ்குமாருடன் இணைந்து முதல் முறையாக பணியாற்றுகிறார்.

