68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் திரைக்கலைஞர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரைத்துறையை சேர்ந்த பல்வேறு சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது அந்த வகையில் 2020ம் ஆண்டிற்கான 68வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான விருது சூரரைப் போற்று படத்திற்காக சூர்யாவுக்கும், அதே படத்திற்காக சிறந்த நடிகை விருது அபர்ணாபாலமுரளிக்கும், சிறந்த இசைக்கான விருது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கும் அறிவிக்கப்பட்டது. மேலும், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த படம் ஆகிய 5 தேசிய விருதுகள் சூரரைப் போற்று படத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்திற்கு சிறந்த தமிழ் படம், சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த துணை நடிகை ஆகிய மூன்று பிரிவுகளில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 68வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் விருதுகளை வென்றுள்ளவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
#68thNationalFilmAwards-இல் விருதுகளைக் குவித்துத் தமிழ்த்திரையுலகுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி @Suriya_offl, @Sudha_Kongara, @gvprakash, @Aparnabala2 உள்ளிட்ட #SooraraiPottru படக்குழுவினருக்கும்; (1/3)
— M.K.Stalin (@mkstalin) July 22, 2022

