தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கருத்து.
பாண்டிய நாடு, பல்லவ நாடு
நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே மாவட்ட பாஜக சார்பில் நெல்லை சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், ‘தனிநாடு வேண்டும் என்பது ஆ.ராசாவின் சொந்த கருத்து. என்னை பொறுத்தவரை தமிழ்நாட்டை பாண்டிய நாடு, பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும். ஆந்திராவில் தெலங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அங்கு கிடைத்துள்ளன. எனவே, தமிழ்நாட்டை நிர்வாக ரீதியாக இரண்டாக பிரித்தால் அதிக திட்டங்களை பெற முடியும். தமிழ்நாட்டில் போதை பழக்கம் அதிகரித்துள்ளது அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில், பாஜக தலையீடு எதுவும் இல்லை. அதிமுக விவரத்தில் பாஜக எப்பொழுதுமே நடுநிலையாக தான் செயல்படும்’ என தனது கருத்தை தெரிவித்தார்.

