தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதிலும் தமிழகத்தில் குறைந்து வந்த நோய்த் தொற்றுயின்
பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா தாக்கத்தில் இருந்து நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள முககவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற அரசு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டு, அதனை அனைவரும் கடைப்பிடிக்க அறிவுறுத்தியும் வருகிறது. தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தனிமைப்பட்டுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்று பதிவிட்டுள்ளார்.

