அதர்வா நடிப்பில் உருவாகியுள்ள ‘குருதி ஆட்டம்’ திரைப்படம் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
குருதி ஆட்டம்
100 திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அதர்வா நடித்து வரும் படம் குருதி ஆட்டம். ப்ரியா பவானி சங்கர், ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரித்துள்ளது.
ரிலீஸ் தேதி
அதர்வா நடிப்பில் கடைசியாக வெளியான 100 படமும் தோல்வியை தழுவியதால் ‘குருதி ஆட்டம்’ திரைப்படத்தை அதர்வா பெரிதும் நம்பியுள்ளார். முதலில் இந்த படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், ‘குருதி ஆட்டம்’ படம் ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
COURAGE isn’t “NEVER FAILING”
But in RISING every time we fall ! 🔥 #KuruthiAttamIn Theaters from August 5th 2022 ! @sri_sriganesh89 @priya_Bshankar @thisisysr @Rockfortent @ahatamil @DoneChannel1 @kbsriram16 pic.twitter.com/Qt1Qt1EsRs
— Atharvaa (@Atharvaamurali) July 13, 2022

