Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, May 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 12 பேரின் ஜாமீனை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – 12 பேரின் ஜாமீனை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை

March 13, 20262 Mins Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேரின் ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் உள்ள அவருடைய வீட்டருகே, கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை தமிழக காவல் துறை விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் இமானுவேல், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழக காவல் துறையின் விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, காவல் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைக்கும், காவல் துறையின் விசாரணைக்கும் முரண்பாடுகள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அத்துடன் காவல் துறையின் குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, வழக்கை சிபிஐக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்குத் தடைவிதித்து, கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதி உத்தரவிட்டது.

இதையும் படிக்க :  பாஜகவினர் மீது தொடர்ந்து அடக்குமுறையை ஏவும் பாசிச மாடல் அரசு ஒழிய வேண்டும்! நயினார் நாகேந்திரன் தாக்கு

இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 12 பேருக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “இந்த வழக்கில், இன்னும் விசாரணை முழுமையாக முடியவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கினால் அவர்கள் ஆதாரங்களை அழித்து, சாட்சிகளைக் கலைத்து விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட 12 பேரும் மார்ச் 6-ஆம் தேதிக்குள், சென்னையில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. பின்னர், அவர்கள் சரணடைவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதையும் படிக்க :  வேட்பாளர் செலவுகள் குறித்து கணக்கீடு: தேர்தல் ஆணையம் நிர்ணயித்த உணவு விலைப்பட்டியல் வெளியீடு

இந்நிலையில், ஜாமீனை ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, அதுல் எஸ்.சந்துர்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 12 பேரின் ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவிபத்தில் மூளைச்சாவு: தேனி பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்! 4 பேருக்கு மறுவாழ்வு
Next Article வேளச்சேரி தங்க நகை வியாபாரியிடம் ரூ.30 லட்சம் வழிப்பறி – ஈசிஆரில் மது விருந்து… தேடிச் சென்று தூக்கிய போலீஸ்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,494 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,006 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.