Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, August 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»“வசதி படைத்தோருக்கு இலவசம் ஏன்?” – உச்ச நீதிமன்றம் கேள்வி

“வசதி படைத்தோருக்கு இலவசம் ஏன்?” – உச்ச நீதிமன்றம் கேள்வி

February 20, 20263 Mins Read50 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மின்சார சட்டத் திருத்தத்தை எதிர்த்த தமிழக அரசின் ரிட் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலவசத் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைபடும். இலவச அறிவிப்புகள் வெளியிடுவதை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அறிஞர்களும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் டி.ஹரிஷ்குமார் தாக்கல் செய்த ரிட் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: மின்சாரம் பொதுப் பட்டியலில் இருக்கிறது. மின்நுகர்வு மீதான வரி, மின்விற்பனை மீதான வரி விதிக்கும்அதிகாரம் ஆகியவை மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலில் உள்ளது

இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு புதிய மின்சாரத் திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணையின்கீழ் 246-வது பிரிவு வழங்கியுள்ள மாநிலங்கள் சட்டம் இயற்றும் அதிகாரத்தையும் மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் பொதுப் பட்டியலில் உள்ள அதிகாரத்தையும் மீறுவதாக இந்த திருத்தச் சட்டம் உள்ளது.

சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: புதிய மின்சாரத் திருத்த சட்டத்தில் உள்ள அம்சங்கள் மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும், அரசியல் சாசனம் வகுத்துள்ள கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகவும் உள்ளன. குறிப்பாக மின்சாரத் திருத்த சட்டத்தின் 23-வது விதி சட்ட விரோதமாக உள்ளது. எனவே, புதிய மின்சாரத் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  22ம் தேதி உருவாகக்கூடிய தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து புயலாக மாறுமா?

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பி.வில்சன், கோபால் சுப்பிரமணியம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது தலைமை நீதிபதி கூறியதாவது: சிலர் வசதி வாய்ப்பின்றி உள்ளனர். சிலர் கல்விக்கும், அடிப்படை வசதிகளுக்கும் செலவிட முடியாத நிலையில் உள்ளனர். இது உண்மைதான். இதுபோன்ற நபர்களுக்கு கல்வி, அடிப்படைவசதிகளை வழங்குவது அரசின்கடமை.

வசதி படைத்தோருக்கு இலவசம் ஏன்? – ஆனால், இலவசங்களை பெரும்பாலும் வசதி படைத்தவர்கள்தான் அனுபவித்து வருகின்றனர். பெரிய அளவிலான நில உடமையாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆடம்பர விளக்குகளையும், இயந்திரங்களையும் இலவச மின்சாரத்தில் அவர்கள் தொடர்ந்து இயக்குகின்றனர். மின்சார வசதி வேண்டும் என்றால் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாமே. யாருடைய வரிப் பணத்தைக் கொண்டு இலவச மின்சாரம் வழங்குவது?

இது தமிழகத்துக்கு மட்டுமின்றி, நாடு முழுமைக்கும் பொருந்தும். அனைத்து மாநிலங்களிலும் இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நாம் எதுமாதிரியான கலாச்சாரத்தை உருவாக்கி வருகிறோம்? மின் கட்டணத்தை செலுத்த முடிந்தவர்களையும், செலுத்த முடியாதவர்களையும் வேறுபடுத்திப் பார்க்காமல், ஏன் ஒரேமாதிரியான சலுகைகள், இலவசங்களை வழங்குகிறோம்? மாநில அரசிடம் நிதி இல்லாவிட்டாலும், இலவச திட்டங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன. வசூலிக்கப்படும் 25 சதவீத வரி வருவாயில் வளர்ச்சி திட்டங்களுக்கு ஏன் செலவிடக் கூடாது?

இதையும் படிக்க :  ''வரதட்சணை அளிப்பதன் மூலம் அசிங்கமான பெண்களை எளிதில் திருமணம் செய்து வைக்கலாம்"- கூறுவது இந்திய நர்சிங் கவுன்சில் பாடத்திட்டம்.

வருவாய் மிகுதியான மாநிலமாக இருந்தாலும், ஒட்டுமொத்த மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களான சாலை மேம்பாடு, மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மேம்பாடு போன்றவற்றை செயல்படுத்தும் கடமை அரசுக்கு இல்லையா? இதற்கு பதிலாக தேர்தலின்போது உணவு, உடை போன்றவற்றை கொடுக்கின்றனர். அவற்றை மக்களும் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொள்கின்றனர்.

இலவசத் திட்டங்கள் அறிவிப்பு- நாட்டில் என்ன நடக்கிறது? தேர்தல்நடைபெற்ற மாநிலங்கள், நடைபெறப் போகும் மாநிலங்களில் என்ன நடக்கிறது என்பதை அறிவோம். தேர்தல் நெருங்கும்போது மட்டும் திடீர் திட்ட அறிவிப்புகள் ஏன் வெளியிடப்படுகின்றன? தேர்தலுக்கு முன்பு பல்வேறு இலவசத் திட்டங்கள் ஏன் அறிவிக்கப்படுகின்றன? இதுபோன்ற இலவச அறிவிப்புகள் வெளியிடுவதை அனைத்து அரசியல் கட்சிகளும், சமூக அறிஞர்களும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இலவசத் திட்டங்களை அதிக அளவில் செயல்படுத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தடுப்பதாகிவிடும். எல்லாவற்றுக்கும் நிலைப்பாடு தேவை. எவ்வளவு காலம்தான் இலவசங்கள் தொடர்வது? காலை இலவச உணவு, இலவச எரிவாயு, இலவச மின்சாரம் என எல்லாவற்றையும் இலவசமாகவே வழங்கினால் மக்கள் ஏன் வேலை செய்ய வேண்டும்?

தேவையான எல்லாம் இலவசமாகவே கிடைக்கும் போது, உழைப்பதற்கும், வேலை செய்வதற்கும் எப்படி கற்றுக் கொள்வார்கள்? இதுபோன்ற தேசத்தைத்தான் நாம் கட்டி எழுப்புகிறோமா? இவ்வாறு கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி சூர்யகாந்த், தமிழக அரசின் ரிட் மனுவுக்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article22 மாநிலங்களில் ஏப்ரலில் எஸ்ஐஆர் பணி தொடக்கம்
Next Article தமிழக முதல்வருக்கு எதிராக சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,144 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,076 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,864 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,144 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,076 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.