அரசியல்இந்தியாசமூகம்தமிழ்நாடு

“தி.மு.கவிற்கு சட்டம் தெரியாது ! பேரறிவாளன் விடுதலைக்கு மத்திய அரசே காரணம்” – சுப்பிரமணியன்‌ சுவாமி கருத்து !

பா.ஜ.க வின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி அவர்கள் நேற்று ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், ‘தமிழக அரசிற்கு சட்டம் தெரியாது. அவர்கள் நினைத்ததை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவரும் சினிமா கூத்தாடிகள்’ என்று விமர்சித்தார்.

தி.மு.க செயல்கள்

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பல வேலைகளில் அவர்களின் முடிவுகள் அனைத்தும் மத்திய அரசோடு ஒத்து போவதாக இல்லை. நீட், இட ஒதுக்கீடு, இந்தி திணிப்பு போன்ற பல பிரச்சனைகளில் மத்திய அரசை சீண்டும் வகையில் அவர்களின் முடிவுகள் இருந்தது. தமிழக மக்கள் பலரும் அவர்களின் முடிவுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.


இவ்வாறான தி.மு.க.வின் செயல்கள் மத்திய அரசை பெரிதும் துன்புறுத்தி இருக்கிறது என்பதை சுப்பிரமணியன் சுவாமி அவர்களின் கருத்து வெளிப்படையாக காண்பிக்கிறது. முந்தைய அ.தி.மு.க ஆட்சியிலும் நீட், இந்தி திணிப்பு போன்ற விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராகவே அவர்களும் குரல் கொடுத்தனர். ஆனால், இவ்வளவு வெளிப்படையாக எதிர்க்கவில்லை. இந்த பிரச்சனைகளை கோரிக்கையாக மத்திய அரசின் முன் வைத்தனர்.

பேரறிவாளன் விடுதலை – மத்திய அரசே காரணம்

சுப்பிரமணியன் சுவாமி, ‘தமிழக அரசிற்கு சட்டம் தெரியாது’ பேரறிவாளன் விடுதலை ஆனது சிறையிலிருந்து மட்டுமே! குற்றத்தில் இருந்து அல்ல. அவர் விடுதலையில் சதி நடந்துள்ளது. அவரின் விடுதலைக்கு மத்திய அரசே காரணம்.


மத்திய அரசின் கருத்தை உச்சநீதிமன்றம் கேட்டது. மனு தாக்கல் செய்ய கூறியது. மூன்று முறை கேட்ட பிறகும் பதில் வராததால் பேரறிவாளனை விடுதலை செய்தது. அவரின் விடுதலைக்கு மத்திய அரசின் தவறே காரணம்’ என்று அவர் கூறினார்.

142 சட்டப்பிரிவு

பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசின் கருத்தை கேட்ட உச்சநீதிமன்றம், ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்தது. மூன்று முறைக்கு மேல் கருத்து கேட்ட பிறகும் பதில் வராததால், ‘161வது சட்டப்பிரிவின்படி ஆளுநர் அவர்கள் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால் 142வது சட்டப்பிரிவின்படி தாங்களே விடுதலை செய்வதாக அறிவித்தது’.


இதையும் சுட்டிக்காட்டிய சுப்பிரமணியன் சுவாமி அவர்கள், ‘142வது சட்டப்பிரிவை இந்த விவகாரத்தில் பயன்படுத்த முடியாது, இது தவறான செயல்’ என்று உச்சநீதிமன்றம் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related posts