தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டு வழக்கு தொடர்பாக அப்பாவிகள் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து மதுரை உயர் நீதிமன்ற முன் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடியில் தொழிலதிபர் அணில் அகர்வாலுக்கு சொந்தமான வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் அலை இயங்கி வந்தது. இந்த அலையில் இருந்து வெளியாகும் புகை மற்றும் கழிவுநீரால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிசூட்டு
இந்த போராட்டத்தில் ஏராளமான கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். இப்போராட்டம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த போராட்டத்தின் 100வது நாளாக மே 22 2018 அன்று அலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை நோக்கி பேரணியாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 2 பெண்கள் உட்பட 13 நபர்கள் போலீசார் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது நாட்டையை பரபரப்புக்கு உள்ளாக்கியது.
அருணா ஜெகதீசன் ஆணையம்
இந்த துப்பாக்கிசூட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்து அப்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டது. சுமார் நான்கு ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் போராட்டத்திற்கு தொடர்பான பொது மக்கள், போராட்டக்குழுவினர்கள், நேரடி சாட்சிகள், மறைமுகசாட்சிகள், பல கட்சினர் என பலதரப்பு மக்கள் கலந்து கொண்டனர். விசாரணை நிறைவடைந்த நிலையில் கடந்த 18ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரை நீதிபதி அருணா ஜெகதீசன் சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
சிபிஐ பொதுமக்களுக்கு சம்மன்
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டு தொடர்பான சிபிஐ வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ 101 நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் ஏற்கனவே 27 நபர்கள் ஆஜரான நிலையில் மீதமுள்ள 74 நபருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. அதன் அடிப்படியில் மீதமுள்ள 64 பேர் இன்று மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து மேலும் 10 நபர்கள் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கூறி வழக்கை ஓத்தி வைத்தது. அப்போது வழக்கில் ஆஜராக வந்த போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தலைமையில் சிபிஐக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
செய்தியாளர்கள் சந்திப்பு
செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், ‘இந்த வழக்கு காவல் துறையினர் துப்பாக்கிசூட்டில் ஈடுபட்டனரா என்று விசாரணையில் கண்டறிவதற்குதான். ஆனால் அப்பாவி மக்கள் மீது தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு நேரடியாக தலையிட வேண்டும் என்று நங்கள் கோரிக்கை வைக்கிறோம். குறிப்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் கமிஷன் அறிக்கையை தமிழக அரசு வெளியிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.