இந்தியாதொழில்நுட்பம்வணிகம்

5ஜி அலைக்கற்றை அடிப்படை விலைகளை 90% குறைக்க வேண்டும்: டெல்கோஸ் வலியுறுத்தல்!.

இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம், டிராய் நிறுவனத்துக்கு பரிந்துரைத்துள்ள ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் மிக அதிகமாகவும், ஏமாற்றமளிப்பதாகவும் உள்ளதாக டெல்கோஸ் கூறியுள்ளது. இந்நிலையில் தொழில்துறையின் நிதி நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தனியார் நிறுவன நெட்வொர்க்குகளை அனுமதிக்க கூடாது என COAI தெரிவித்துள்ளது.

”இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) 5G அலைக்கற்றைகளுக்கான அடிப்படை விலைகளை 90% குறைக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டில் சீர்திருத்தங்களுக்காக அரசாங்கம் வழங்கிய நிவாரணத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது. 30 ஆண்டுகளுக்கு அடிப்படை விலையில் அலைக்கற்றைகளை வாங்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்று துறை ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டனர்.

5G பேண்டுகள், 700 Mhz மற்றும் 3300-3670 Mhz ஆகியவற்றுக்கான இருப்பு விலையில் 40% குறைப்பை டிராய் பரிந்துரைத்தது. மேலும் 700 Mhzக்கான அடிப்படை விலையை வைத்து 5Gக்கு 600 Mhz என்ற புதிய பேண்டு ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேல் பணம் செலுத்துதல், பகுதிப் பணம் செலுத்துதல் மற்றும் மொராட்டோரியத்தின் நெகிழ்வுத்தன்மை, ஆபரேட்டர்களுக்கு எளிதான ரோல்அவுட் நிபந்தனைகள் உள்ளிட்ட எளிதான கட்டண விருப்பங்களையும் டிராய் பரிந்துரைத்துள்ளது.அலைக்கற்றைகளை 20 ஆண்டுகளுக்குப் பதிலாக 30 ஆண்டுகளுக்கு எடுத்தால் ஸ்பெக்ட்ரம் விலை 1.5 மடங்கு இருக்கும். ஸ்பெக்ட்ரத்தை அரசாங்கத்திடம் இருந்து நேரடியாகவோ அல்லது தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து குத்தகைக்கு எடுத்துக்கொண்டு கேப்டிவ் எண்டர்பிரைஸ் நெட்வொர்க்குகளை அமைக்கலாம் என்று டிராய் கூறியுள்ளது.

தொலைத்தொடர்புத் துறையின் நிதி நம்பகத்தன்மையை உறுதிசெய்ய தனியார் நிறுவன நெட்வொர்க்குகளை அனுமதிக்க கூடாது என்றும், 30 ஆண்டுகால அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் குறைந்தபட்ச வெளியீட்டுக் கடமைகளுக்கு 1.5 மடங்கு விலை அதிகரிப்பு என்ற பிற்போக்கு நடவடிக்கையை அகற்ற வேண்டும் என்றும் COAI கூறியுள்ளது.

 

Related posts