வெந்து தணிந்தது காடு படத்தின் டப்பிங் பணிகள் பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், இந்த படத்திலிருந்து மற்றொரு பாடல் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சிம்பு படம்
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் வெந்து தணிந்தது காடு. சிம்புவுக்கு ஜோடியாக சிதி இத்னானி நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் தயாரித்து இருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். சிம்பு, கவுதம் மேனன் மற்றும் ஏ.ஆர். ரகுமான் மூன்றாவது முறையாக இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
வெந்து தணிந்தது காடு செப்டம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்திலிருந்து மற்றொரு பாடல் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

