உலகம்

ஒரு நிறுவனத்துக்கு இவ்வளவு கடனா… யாருப்பா இந்த எவர் கிராண்டே?

சீனாவின் முக்கிய நிறுவனமாக இருந்து வந்த எவர் கிராண்டே வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தத்தளித்து வருகிறது.

எவர் கிராண்டே

சீனாவின் ஆளுமைமிக்க தொழிலதிபர்களில் ஒருவரான ஹூ கா யான், முதன்முதலில் ஹெங்க்டா குழுமத்தினை தொடங்கினார். அது பின்னர் எவர் கிராண்டேவாக பெயர்மாற்றப்பட்டு அசாத்தியமான வளர்ச்சியை எட்டியது. ரியல் எஸ்டேட் நிறுவனமாக தொடங்கப்பட்ட எவர் கிராண்டே சீனாவில் 280க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் வணிக உலா வருகிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் மட்டுமல்லாமல், பல துறைகளிலும் வணிகம் செய்து வருகிறது.

300 பில்லியன்

ஒருகாலத்தில் மின்சார கார் உற்பத்தி, உணவு துறை என கால் வைத்த அனைத்திலும் தனக்கான தடத்தை பதித்துக்கொண்டிருந்தது எவர் கிராண்டே. பிரம்மாண்ட வளர்ச்சியினை கண்டு வந்த எவர் கிராண்டே நிறுவனம், தனது வணிகத்தினை மேம்படுத்த 300 பில்லியன் டாலரினை முதலீட்டில் பயன்படுத்த்தியது. அந்த சமயத்தில் சீன அரசு புதிதாக கொண்டுவந்த விதிமுறைகள் எவர் கிராண்டே நிறுவனத்துக்கு தலைவலியாக அமைந்தது. அதிலிருந்து சரிவை சந்திக்கத்தொடங்கிய எவர் கிராண்டே இன்னும் மீண்டபாடில்லை.

மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் எவர் கிராண்டே நிறுவனத்துக்கு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியானது சர்வதேச அளவில் முதலீடு செய்பவர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது. இதனால் கடந்த ஆண்டு முதலே எவர் கிராண்டே நிறுவனத்தின் பங்குதாரர்களின் அளவு குறையத்தொடங்கியது. விளைவாய் தற்போது பங்கு சந்தையில் இருந்து எவர் கிராண்டே இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமான கடனில் சிக்கித் தவிக்கும் எவர் கிராண்டே தனது சப்ளையர்கள், வங்கிகள் போன்றோரிடம் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருவதாகவும், இதனால் உலக பங்கு சந்தைகளில் வீழ்ச்சி ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Related posts