Editor's Picksதமிழ்நாடு

மேகதாது அணை விவகாரம் ; பேரவையில் திமுகவை விளாசிய பழனிசாமி!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசு தொடர்ச்சியாக முயன்று வரக்கூடிய சூழலில், அப்படி மேகதாதுவில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டினால் அது டெல்டா பகுதி விவசாயிகளை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்குமென கூறி தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது தமிழக அரசு.

இந்நிலையில், இன்று காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாதென தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மேற்கண்ட தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில் எதிர்க்கட்சியான அதிமுக எவ்வித விமர்சனங்களையும் முன்வைக்காமல் தீர்மானத்தை நிறைவேற்றி தர வேண்டும் என பேசினார்.

அதற்கு பின், தீர்மானத்தை ஏக மனதாக அதிமுக ஆதரிப்பதாக கூறி பேசிய எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தற்போது ஆட்சிப்பொறுப்பிலுள்ள திமுக, கடந்த காலங்களில் மத்திய அரசில் தொடர்ச்சியாக அங்கம் வகித்துவந்துள்ளதுடன், அமைச்சர் பொறுப்புகளையும் பெற்றிருந்தது. ஆனால், அப்போதெல்லாம் காவிரி விவாகரத்திற்கு திமுக எவ்வித நிலையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என திமுகவை கடுமையாக சாடினார்.

மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைத்திட வேண்டுமென்ற உச்சநீதிமன்ற தீர்ப்பினை மத்திய அரசின் அரசிதழில் கொண்டுவந்தவரும் எங்கள் மறைந்த தலைவர் ஜெயலலிதா தான் என சுட்டிக்காட்டி பேசினார் எடப்பாடி பழனிசாமி.

Related posts