தமிழகம் சேர்ப்பாக நிலுவை கட்டணம் செலுத்தப்பட்ட காரணத்தால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் தட்டுப்பாடு
மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள 13 மாநிலங்கள் தங்கள் அவசர தேவைக்கு மின்சாரம் வாங்க முதன்முறையாக தடையை விதித்துள்ளது. பவர் சிஸ்டம் ஆபரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் (POSOCO). இந்த 13 மாநிலங்களுக்கு மொத்தமாக சுமார் 5,085 கோடி ரூபாய் கட்டண பாக்கியை மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த மாதம் தமிழகத்தின் சார்பில் செலுத்த வேண்டிய தொகை 926 கோடி ரூபாய் உள்ளது. இதில் 850 கோடி ரூபாய் ஏற்கெனவே செலுத்தியாகி விட்டது. இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று தமிழக அரசு சார்பாக விளக்கம் கொடுத்துள்ளது. இதனால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது.

