இளையராஜா பாடல்கள் எனக்கு தன்னம்பிக்கை பாடல்களாக இருந்திருக்கிறது என்று இயக்குனர் பா.இரஞ்சித் கூறியுள்ளார்.
பா.இரஞ்சித்
சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. காதல் கதையம்சம் கொண்ட படமாக தயாராகி இருக்கும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா விஜயன் முண்ணனி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், கலையரசன், ஹரிகிருஷ்ணன், ஷபீர் ஆகியோர் நடித்துள்ளனர். நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் வரும் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா
இந்நிலையில், நட்சத்திரம் நகர்கிறது படம் குறித்து பேசிய இயக்குனர் பா.இரஞ்சித், ‘இது காதல் படம் அல்ல காதலைப்பற்றிய படம். மேலும், இசைஞானி இளையராஜா சார் கிட் நெருங்கவே எனக்கு தயக்கமாக இருக்கும். ரொம்ப பிடித்தவர்களை நான் தூர நின்று தான் பார்ப்பேன்’ என்று கூறியுள்ளார்.

