கொரோனா தொற்று காரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது சிகிச்சைக்காக சென்னை காவேரி மருத்துவமமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்த மு.க. ஸ்டாலின் தற்போது சென்னை உள்ள தனியார் (காவேரி) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சி.டி.ஸ்கேன் எடுப்பதற்காக ஸ்டாலின் மருத்துவமனை வந்த அவர் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சி.டி.ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாகவும், ஸ்கேன் முடிந்தவுடன் மாலையில் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

