அரசியல்இந்தியா

ராம நவமி விழாவில் மதக்கலவரம்.. பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் இருக்கிறதா!?

மேற்கு வங்காளத்தில் நடைப்பெற்ற ராம நவமி விழாவில் மதக்கலவரம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து மேற்கு வங்காளத்தின் பாஜக மாநிலத் தலைவரான டாக்டர். சுகந்தா மஜும்தார்,  இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராம நவிமி என்பது ஒரு இந்து மத வழிப்பாட்டு விழாவாகும். அயோத்தியில் தசரதன் மற்றும் ராணி கௌசல்யா ஆகியோருக்கு ராமர் பிறந்தார் என்ற நம்பிக்கையில் ராம நவமி விழா கொண்டாப்படுகிறது . இது விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகவும், ராமரின் பிறந்தநாளாகவும் கருதப்படுகிறது.

திருவிழாவின் முக்கியத்துவம் என்னவென்றால், தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டும் விதமாக ராம நவமி பண்டிகை கொண்டாட்டப்படுகிறது. ராமனின் மூதாதையர்கள் சூரியனின் வழித்தோன்றல்கள் என்றும், அதர்மத்தை வெல்ல தர்மம் தலைத் தூக்கும் என்றும் மக்கள் நம்புகிறார்கள். ராம நவமி விழாவில், அதிகாலையில் சூரிய பகவானிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற தண்ணீரைப் பிரசாதமாக பயனபடுத்துகின்றன.

இந்தியாவில் பல மாநிலங்களில் ராம நவமி பேரணிகள் நடைப்பெற்றது. இதில் குறிப்பாக 4 மாநிலங்களில் மதக்கலவரங்கள் வெடித்தன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ராமநவமி விழாவில் குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்கத்தில் வகுப்புவாத மோதல்கள் ஏற்பட்டது. குஜராத்தில் நடந்த வன்முறையில் ஒருவர் பலியானார்.

மேற்கு வங்காளத்தின் பாஜக மாநிலத் தலைவரான டாக்டர்.சுகந்தா மஜும்தார்  பேரணியில் கலந்துக் கொண்டார். பலத்த பாதுகாப்புடன் நடைப்பெற்ற இவ்விழாவில் பொது மக்களும், பாஜக தொண்டர்களும் பங்கேற்றனர். இருந்த போதிலும் கலவரம் ஏற்பட்டு பொதுமக்கள் காயம் அடைந்தனர்.

டாக்டர்.சுகந்தா மஜும்தார் , இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘ஹவுராவிலிருந்து பாங்குரா வரை, பிரபு ஸ்ரீராமின் ஊர்வலங்கள் நடந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் அமைப்பினரால் கலவரம் ஏற்பட்டது. மேற்கு வங்கத்தில் இந்துக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்ல’  என டாக்டர்.சுகந்தா மஜும்தார் கூறியுள்ளார்.

மத ஒற்றுமையை கேள்வியாக்கும் கலவரங்களைப் பற்றி உங்களது கருத்து என்ன?

Related posts