இந்தியாசமூகம்

ஒடிஷாவின் பிரபல எழுத்தாளர் பினாபானி மொஹந்தியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பிரபல எழுத்தாளர் பினாபானி மொஹந்தியின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்:

பிரபல எழுத்தாளர் பினாபானி மொஹந்தியின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஒடியா இலக்கியத்தில், குறிப்பாக புனைகதை எழுத்தில் பினாபானி மொஹந்தி மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார் என்று திரு மோடி கூறினார்.

ஒடிய எழுத்தாளர் மற்றும் கல்வியாளரான பினாபனி மொஹந்தி நேற்று தனது 85 வது வயதில் காலமானார். ‘படா டேய்’ மற்றும் ‘கஸ்தூரி மிருகா’ போன்ற படைப்புகளுக்காக நன்கு அறியப்பட்ட இவர். பொருளாதார பேராசிரியராக பணியாற்றியவர். 2020 இல் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது கொடுத்து பாராட்டப்பட்டவர். படா டேய் என்ற படைப்பிற்காக ஒடிசா மொழிக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார். அவர் ஒடிசா லேகிகா சன்சாத் தலைவராகவும் பணியாற்றினார்.

பினாபானி மொஹந்தியின் பல சிறுகதைகள் ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி, உருது, தெலுங்கு மற்றும் ரஷ்யன் போன்ற பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவரது கதையான “அந்தகாரரா சாய்” திரைப்படமாக  எடுக்கப்பட்டு பார்வையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.


சிதாரா சோனிதா, மனஸ்வினி மற்றும் குந்தி, குந்தலா, சகுந்தலா மற்றும் கிராந்தி என்ற மூன்று நாவல்களையும் எழுதியுள்ளார். அவர் ரஷ்ய நாட்டுப்புறக் கதைகளை ஆங்கிலத்திலிருந்து ஒடியாவிற்கு மொழிபெயர்த்துள்ளார்.

பத்மஸ்ரீ உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
கவிதைக்கான ஞாயிறு பிரஜாதந்திர விருது (1956)
கவிதைக்கான ஜாங்கர் (1961)
கஸ்ருரி மிருக ஓ சபுஜா ஆரண்யா (1968) என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்ய அகாடமி விருது
சிறுகதைக்கான ஜிபன்ரங்கா விருது (1973)

பினாபானி மொஹந்தியின் மறைவுக்கு பிரதமர் மோடி தனது கீற்றுப்பக்கத்தில் கூறியிருப்பதாவது;

“குறிப்பிடத்தக்க எழுத்தாளர் பினாபானி மொஹந்தி ஜியின் மறைவால் வேதனை அடைந்தேன். ஒடியா இலக்கியத்தில், குறிப்பாக புனைகதை எழுத்தில் அவர் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளார். அவரது படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பெரும் புகழைப் பெற்றுள்ளன. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.”

Related posts