இந்தியாசமூகம்தமிழ்நாடு

கட்டிடத் தொழிலாளியை அடித்துக் கொலை – வடமாநில இளைஞரை தேடி வரும் போலீசார் !

சென்னையில் சக கட்டிடத்தொழிலாளியை மது அருந்தும் பொது அடித்துக் கொன்ற வடமாநில நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

அடித்துக் கொலை

சென்னை, மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சங்கர் தாஸ் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரத்தீஸ் ஷேக் இருவரும் நாகலூர் பகுதியில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ரத்தீஸ் ஷேக் சங்கர் தாசை அடித்து கீழே தள்ளி விட்டதில் அவருக்கு தலையில் பின்புறம் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சங்கர் தாஸ் காலையில் வேலைக்கு வராததால் சக தொழிலாளர்கள் அவரை பார்க்க சென்றுள்ளனர். அப்போது அங்கு சங்கர் மயக்க நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவர்கள் சங்கர் தாசை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சங்கர் தாசை தாக்கிய ரத்தீஸ் ஷேக் தலைமறைவாகி உள்ள சங்கர் தாஸை போலீசார் தேடி வருகின்றனர்.

Related posts