பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா (பிஎம்-கிசான்) என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசாங்கம் ஆண்டுக்கு ரூ 6,000 ரூபாயை மூன்று தவணைகளில் ரூ. 2000 என விவசாயிகளுக்கு பண உதவி வழங்கி வருகிறது. இத்தொகை இதுவரை விவசாயிகளின் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வந்தது. இந்த பலனை தொடர்ந்து பெற, விவசாயிகள் தங்களது PM Kisan கணக்கிற்கான கட்டாய eKYC சரிபார்ப்பை புதுப்பிக்க வேண்டும்.
சில சிக்கல்கள் காரணமாக, PM கிசான் போர்ட்டலில் eKYC ஐ முடிப்பதற்கான விருப்ப தேர்வு இடம் பெறவில்லை, மேலும் OTP அடிப்படையிலான ஆதார் அங்கீகாரமும் சில நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.
PM கிசான் திட்டத்தில் eKYC தரவுகளை ஆஃப்லைனில் பதிவு செய்ய விவசாயிகள் பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக அருகிலுள்ள பொதுவான சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். KYC ஐ புதுப்பிக்க, விவசாயிகள் தங்கள் மொபைல் எண், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண் மற்றும் IFSC/ MICR குறியீட்டைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். PM கிசான் கணக்கிற்கான eKYC ஐ புதுப்பிக்கவும் மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிக்கவும் அங்குள்ள நிர்வாகிகள் உதவி செய்வர்.