இந்தியாஉணவுவணிகம்விவசாயம்

உச்சம் தொடும் சர்க்கரை விற்பனை.. கோடை காலத்தில் அதிகரிக்கும் நுகர்வுகள்!

இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் அறிக்கைபடி, 2021/22 ஆண்டில் 7.2 மில்லியன் டன் சர்க்கரையை வெளிநாடுகளுக்கு அனுப்ப இந்திய ஆலைகள் ஏற்கனவே ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

கோவிட்-19 கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, குளிர்பானம் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிப்பாளர்கள் போன்ற பெரிய நிறுவனங்களின் சர்க்கரைத் தேவை அதிகரித்து வருவதால், தற்போதைய கோடை காலத்தில் இந்தியாவின் சர்க்கரை நுகர்வு வரலாற்று உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு விலைகள் அதிகரிப்பதைத் தவிர்க்க, இந்தியா ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக சர்க்கரை ஏற்றுமதியை குறைக்க திட்டமிட்டுள்ளது. இந்த வருடத்தின் ஏற்றுமதி 8 மில்லியன் டன்களாக உள்ளது. இது பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின்(ISMA) அறிக்கைப்படி, இந்தியாவின் சர்க்கரை நுகர்வு முந்தைய ஆண்டை விட தோராயமாக 3% அதிகரித்து 27.2 மில்லியன் டன்களாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, இந்தியாவின் உள்ளூர் சர்க்கரை செலவுகள் உயர வாய்ப்புள்ளது.

Related posts