ஞாயிற்றுக்கிழமை (10 ஏப்ரல் 2022) நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் கிசான் யோஜனா மற்றும் விவசாயம் தொடர்பான பிற திட்டங்கள் நமது நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளித்து வருகின்றது என்றார். விவசாயிகளின் முக்கியத்துவம் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகள் வலுப்பெறும் போது நாடு தானாக முன்னேறும் எனகூறினார்.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “நாடு நமது விவசாயிகளால் பெருமை கொள்கிறது. அவர்கள் வலுவாக இருந்தால், புதிய இந்தியா வளமானதாக இருக்கும். நான் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் கிசான் சம்மன் நிதி மற்றும் விவசாயம் தொடர்பான பல்வேறு திட்டங்கள் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளித்து வருகிறது.” என்று குறிப்பிட்டிருந்தார்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா மற்றும் பிற திட்டங்கள் பற்றிய தகவல்களையும் பிரதமர் மோடி பகிர்ந்து கொண்டார். பகிரப்பட்ட தகவல்களின்படி, இந்தியாவில் உள்ள சுமார் 11.3 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1.82 லட்சம் கோடி நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது மற்றும் கோவிட் காலத்தில் மட்டும் விவசாயிகளுக்கு ரூ.1,30 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 11,632 விவசாய அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.8,585 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஏபிஎம்சி மண்டிகளும் (சந்தைகள்) டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டு, அதில் 1.73 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். eNAM இல் ரூ.1,87 லட்சம் கோடி வர்த்தகம் நடந்துள்ளது என்றும் பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.