மெரினா அண்ணா நினைவிட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 2.23 ஏக்கர் பரப்பளவில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது.
நினைவு சின்னம்
அரசு சார்பில் காட்டப்படும் நினைவிடத்தின் முகப்பில் கருணாநிதியின் இலக்கிய சிந்தனைகளை விளக்கும் நோக்கில் நவீன ஒளிபடங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரூ.81 கோடி செலவில் நடுக்கடலில் 134 அடி உயரத்திற்கு ‘பேனா’ நினைவு சின்னம் ஒன்றை அரசு திட்டமிட்டது. இதற்காக மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த நினைவு சின்னம் அமைப்பதினால் ஏற்படும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை 4 ஆண்டுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசு தனது கடிதத்தில் குறிப்பித்துள்ளது.