இந்தியாசினிமாவெள்ளித்திரை

விஜய் வெளியிட்ட ‘பதான்’ பட ட்ரைலர்!

ட்ரைலர் ரிலீஸ்

நடிகர் ஷாருக்கான் நடிப்பில், இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள திரைப்படம் ‘பதான்’. இதில் நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடிக்க, நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ஏற்கனவே வெளியாகி கவனம் பெற்றது. இதனிடையே இந்த படத்தின் முதல் பாடலான ‘அழையா மழை’ பாடல் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. மேலும் சில சர்ச்சைகளையும் கிளப்பியது.

இந்நிலையில், ‘பதான்’ படத்தின் ட்ரைலர் இன்று காலை 11 மணியளவில் வெளியாகி இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த ட்ரைலரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts