காட்சிகள் ரத்து
இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘வாரிசு’. அதேபோல் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்துள்ள படம் ‘துணிவு’. இந்த இரண்டு படங்களும் பொங்கல் பண்டிகையையொட்டி நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 9 ஆண்டுகளுக்கு பிறகு விஜய், அஜித் இருவரின் படமும் ஒரே நாளில் வெளியாகவுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படங்களின் டிக்கெட் முன்பதிவு பரபரப்பாக நடந்து வருகிறது. இதனிடையே துணிவு படத்திற்கு நாளை அதிகாலை 1 மணிக்கும் சிறப்பு காட்சியும், வாரிசு படத்திற்கு அதிகாலை 4 மணிக்கும் சிறப்பு காட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கு ஜனவரி 13-ம் தேதி முதல் 16 -ம் தேதி வரை அதிகாலை சிறப்பு காட்சிகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

