சினிமா

‘ஓ மை டாக்’.. அருண் விஜய்யின் ரீ என்ட்ரி!

ஓ மை டாக் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் ஏப்ரல் 21 அன்று நேரடியாக அமேசான் ப்ரைம்மில் வெளிவரவுள்ளது.

அருண் விஜய் முதன் முதலில் சுந்தர் சியின் இயக்கத்தில் மாப்பிள்ளை எனும் திரைப்படத்தில் அறிமுகமானார். துள்ளித் திரிந்த காலம் மற்றும் பாண்டவர் பூமி ஆகியவற்றில் ஆரம்பகால வெற்றியைப் பெற்றார். இடைப்பட்ட காலங்களில் தொடர் தோல்விகளுக்குப் பிறகு, அவர் என்னை அறிந்தால் படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த புரூஸ்லீ: தி ஃபைட்டர் மற்றும் சக்ரவ்யுஹா ஆகியவற்றில் வில்லனாக வெற்றிக்கண்டார். மேலும் குற்றம் 23, செக்க சிவந்த வானம் மற்றும் தடம் ஆகிய படங்களில் மீண்டும் கதாநாயகனாக நடித்து வணிக ரீதியாக பல வெற்றிகளைக் குவித்தார்.

கதை: ஒரு சிறுவனுக்கும் நாய்க்கும் இடையே உள்ள உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பையும், அன்பையும், பாசத்தையும் அடிப்படையாகக் கொண்டு ஓ மை டாக்  உருவாகியுள்ளது.

நட்சத்திரங்கள்: அருண் விஜய் அப்பாவாகவும், அர்னவ் விஜய் மகனாகவும், விஜய குமார் தாத்தாவாகவும், மஹிமா நம்பியார் அம்மாவாகவும், வினய் ராய் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

ஓ மை டாக் திரைப்படத்தை இயக்குனர் சரோவ் சண்முகம் எழுதி இயக்கியுள்ளார். இது இவரின் முதல் படமாகும். ஜோதிகா & சூரியாவின் 2டி என்டெர்டைன்மெண்ட் மற்றும் துணை தயாரிப்பாளராக ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஓ மை டாக் திரைப்படத்தின் டிரெய்லர் எப்படி இருக்கு?

Related posts