Editor's Picksதமிழ்நாடு

விழித்தெழு தமிழா ; அரசியல் கருத்தரங்கம் – கருத்துரை வழங்குகிறார் சீமான்!

நாம் தமிழர் கட்சி – தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இணைந்து நடத்தக்கூடிய விழித்தெழு தமிழா அரசியல் கருத்தரங்கமானது நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கில், தமிழர் தம் அரசியல் அதிகாரத்தினை நோக்கிய பயணம் குறித்து பங்கேற்பாளர்கள் கருத்துரை வழங்குவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

நாளை (12-03-2022) ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணி முதல் ஸ்ரீ. எஸ்.ஏ.கே. ஜெய் மாருதி மகால், முகலிவாக்கம் முதன்மை சாலை, சென்னை, மதனந்தபுரத்தில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த்தேசிய தன்னுரிமைக் கட்சியின் தலைவர் வியனரசு, தமிழர் நலப் பேரியக்கத்தின் மு.களஞ்சியம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென சமூக வலைத்தளங்கள் வழியே அழைப்பும் விடுத்துள்ளார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

Related posts