Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, April 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»குற்றம்»நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.7,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் விற்பனை

நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.7,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் விற்பனை

March 13, 20262 Mins Read11 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நியோ மேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.7,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் விற்பனைக்கு தயாராக இருப்பதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையைத் தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனங்கள் நடத்தி மோசடியில் ஈடுபட்ட நியோ மேக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் அதிக வட்டி தருவதாகவும் முதலீடு முதிர்வு காலத்தில் பல மடங்கு அதிகமாக திருப்பித் தரப்படும் என பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டன.

இந்த வழக்கை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர். மோசடியில் ஈடுபட்டு, ஜாமீனில் உள்ள இயக்குநர்கள் நீதிமன்ற உத்தரவுகளை மீறி செயல்படுவதால், அவர்களின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை நீதிபதி பரத சக்கரவர்த்தி தொடர்ந்து விசாரித்து வருகிறார்.

கடந்த வார விசாரணையின் போது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை பொது ஏலம் விடுவதற்கு அனுமதி வழங்கியும், அதற்கான ஆன்லைன் பதிவு முகவரி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

இதையும் படிக்க :  நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் - கலெக்டர் அறிவிப்பு !

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், “நியோ மேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.7 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை 4 வகைகளாக பிரித்து விற்பனைக்கு தயார் செய்யப்பட்டுள்ளது.

அரசு அனுமதி பெற்ற நிலங்கள், அரசு அனுமதிக்காக விண்ணப்பிக்க பட்ட நிலங்கள், அரசு அனுமதி பெறாமல் வாங்கி வைக்கப்பட்டுள்ள நிலங்கள், அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட நிலங்கள் என நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் செய்யப்பட்டு வருகிறது. நிலங்களை வாங்குவதற்கு ஆன்லைன் பதிவு கட்டணமாக 1,000 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது. மற்றபடி எந்த கட்டணமும் கிடையாது.” என தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “கடந்த ஒரு வார காலமாக எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் ? அதில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை நபர் ? தனி நபர்கள் எத்தனை ? என மத்திய அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிக்க :  காதல் மனைவிக்காக நடுரோட்டில் மல்லுக்கட்டிய கணவன்

அதற்கு, பாதிக்கப்பட்ட நபர்கள் 60 பேர் மட்டுமே இதுவரை விண்ணப்பித்துள்ளனர். தனிநபர்கள் 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்” என்று மத்திய அரசு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நீதிபதி, “இந்த திட்டம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் பதிவு எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எதையும் கடைசி நேரத்தில் எதிர்கொள்ளலாம் என உள்ளது. இது தவறான முன்னுதாரணம். இதுவரை 60 நபர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர் என்பது வருத்தம் அளிக்கிறது.

எனவே நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகள் அரசின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் சென்றடைந்ததா ? எனத் தெரியவில்லை. பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் இது குறித்து நடவடிக்கை எடுத்தார்களா? என்பது தெரியவில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் சென்றடையும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசந்திக்க நேரம் ஒதுக்கக் கோரிய மேற்கு வங்க அரசு! நிராகரித்த குடியரசுத் தலைவர்!
Next Article இந்து மக்கள் கட்சி மாநாட்டிற்குத் திமுக அரசு அனுமதி வழங்க வேண்டும்! நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

Related Posts

குற்றம்

சாத்தான்குளம் வழக்கில் தண்டனை விவரம் ஏப்ரல் 2-ல் அறிவிப்பு

March 31, 2026
இந்தியா

செம்பருத்திப் பூவை விழுங்கிய ஆறரை மாத குழந்தை உயிரிழப்பு – மைசூரில் சோகம்

March 31, 2026
குற்றம்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.