Editor's Picksஇந்தியா

நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா ; காங்கிரஸ் தலைமை அதிரடி!

சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப், கோவா, உத்திரபிரதேசம், உத்திர பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து ஏனைய நான்கு மாநிலங்களிலும் பாஜக அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்துள்ளது.

அதே சமயம், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக ஜனநாயக சக்திகளை ஓரணியில் திரட்டவும், தேர்தல் உத்திகளை சரிவர வகுக்கவும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை தவறிவிட்டது என்ற விமர்சனங்கள் அரசியல் நோக்கர்கள்களாலும், காங்கிரஸ் கட்சியினராலேயுமே முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், ஐந்து மாநில தேர்தல் தோல்வி குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் அக்கட்சி தலைவர் சோனியா காந்தி தலைவர் முன்னிலையில் நடைபெற்றது.

ஆலோசனைக்கு பின்னர், பஞ்சாப், கோவா, உத்திரபிரதேசம், உத்திர பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய ஐந்து மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென சோனியா அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமையின் அறிவுறுத்தலை தொடர்ந்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார் நவ்ஜோத் சிங் சித்து.

அதே சமயம், பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பெருவெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் பக்வந்த் மான் முதலமைச்சராக இன்று பதவியேற்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts