2030-ம் ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் மதிப்புக்கு தமிழகத்தில் இருந்து ஜவுளியை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கிலப் பத்திரிகையில் வந்த செய்தியுடன் தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவு வருமாறு-
திமுக அரசின் மின் கட்டண உயர்வால் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் 618 ஜவுளி ஆலைகள் மூடப்பட்ட நிலையில், தற்போது மத்திய அரசின் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால், தமிழக ஜவுளித்துறை புத்துணர்வு பெற்று, வரும் 2030-ம் ஆண்டுக்குள் $10 பில்லியன் ஜவுளியை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது!
இது தான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திறனற்ற திமுக அரசுக்கும், மக்கள் நலனில் அக்கறை கொண்ட பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்குமான வித்தியாசம்!
இவ்வாறு அந்தப் பதிவில் அவர் கூறியுள்ளார்.

