அரசியல்இந்தியாசமூகம் - வாழ்க்கைபயணம்

2024லில் பாஜகவை அகற்றுவதே தனது கடைசியின் போராட்டம் – முதலமைச்சர் சூளுரை !

2024ல் ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்றுவதே தனது கடைசி போராட்டம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜி

மேற்கு வங்காளத்தில் பாஜகவை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி, ‘2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட்டு ஆட்சியில் இருந்து பாஜகவை அகற்றுவதே எனது கடைசி போராட்டம். மேற்கு வங்காளத்தை பாதுகாப்பதன் மூலம் 2024ல் மத்தியில் ஆட்சியில் இருந்து பாஜகவை நாம் நீக்குவோம் என நான் உறுதியளிக்கிறேன். நாட்டில் உள்ள தலைவர்கள் அனைவரும் தோல்வியை சந்தித்தாகவேண்டும். இந்திய அரசியலில் இந்திரா காந்தி வலிமையான அரசியல் தலைவர், ஆனால் அவரும் தோல்வியை சந்தித்துள்ளார். பாஜக சுமார் 30 எம்.பி.க்களை வைத்துள்ளது. ஆனால், பீகார் கைநழுவி சென்றுவிட்டது. தேர்தல் வரும் முன் பாஜகவில் தலைவர்களே இல்லாத சூழ்நிலை ஏற்படும்’ என கூறியுள்ளார்.

Related posts