சினிமாவெள்ளித்திரை

வைரலாகும் வடிவேலு பட மூன்றாவது பாடல்!

மூன்றாவது பாடல்

நடிகர் வடிவேலு நடிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் ‘நான் டீசென்டான ஆளு’ எனும் மூன்றாவது பாடல் நேற்று வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related posts