அரசியல்இந்தியாசினிமா

‘இளையராஜா எனும் நான்’ – அரசியலில் ஒலித்த குரல் !

இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.

ராஜ்யசபாவில் இளையராஜா

இந்தியாவில் இசை உலகின் ஜாம்பவானாக கடந்த 50 ஆண்டுகளுகளாக இருப்பவர் இசையமைப்பாளர் இளையராஜா. இவரின் இசையாளுமையை சிறப்பிக்கும் வகையில் சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டார். மத்திய உள்ள பாஜக அரசின் பரிந்துரையின் பேரில் அவர் மாநிலங்களவை உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் நியமனம் செய்தார். மற்றவர்கள் பதவியேற்ற நிலையில், அமெரிக்காவிற்கு சென்றிருந்த காரணத்தால் அவரால் பதவியேற்க முடியாமல் இருந்தது. மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்பதற்காக நேற்று டெல்லி சென்றடைந்த அவருக்கு பாஜகவினர் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். இன்று மதியம் மாநிலங்களவை கூடியதும் இளையராஜா எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார்.

இசைத்துறையில் பல சாதனைகள் புரிந்து எண்ணற்ற விருதுகளை பெற்ற இளையராஜா தற்போது மாநிலங்களவை உறுப்பினர் என்ற புதிய பயணத்தையும் தொடங்கியுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

 

Related posts