சினிமா

மோர்பியஸின் மூர்க்கத்தனம்…ரசிகனின் பார்வையில்!

மார்வெல் என்டர்டெயின்மென்ட் கடந்த சில வருடங்களாகவே திரைப்படங்களை அதிக பொருட்செலவில் பிரம்மாண்ட படைப்புகளாக ரசிகர்களுக்கு ரசிக்கக்கூடிய திரைப்படங்களை தயாரிக்கின்றன.

இவ்வரிசையில் மோர்பியஸ் திரைப்படம் இடம் பெறுமா?

உலகளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் “மோர்பியஸ்”. இத்திரைப்படம் “மார்வெல் என்டர்டெயின்மென்ட்” தயாரிப்பில் “75 மில்லியன் டாலரில்” எடுக்கப்பட்ட படம். பல மொழிகளில் குறிப்பாக “தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் போன்றவற்றில் நேற்று ஏப்ரல் 1 அன்று திரை அரங்கில் வெளியாகியுள்ளது.

மோர்பியஸ் திரைப்பட இயக்குனர் டேனியல் எஸ்பினோசா இவர் “ஈசி மனி, சைல்டு 44, லைப்” போன்ற படங்களை இயக்கியவர்.

டேனியல் எஸ்பினோசா மார்ச் இல் ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம்ஸ் லான் ஹடிங்கில் பிறந்தார். அவர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் “ஸ்னாப்பா கேஷ்” மற்றும் “சேஃப் ஹவுஸ்” ஆகியவற்றால் அறியப்பட்டவர்.

மோர்பியஸ்: உடல்நலம் பாதிக்கப்பட்ட உயிர்வேதியியல் வல்லுநர் மைக்கேல் மோர்பியஸ், ஒரு அரிய இரத்த நோயிலிருந்து தன்னைக் குணப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால், அவரது பரிசோதனை தவறாக நடக்கும்போது ​​அவர் கவனக்குறைவாக ஏற்படும் தவறால் அவரத்து உடல் நிலையில் மற்றம் ஏற்படுகிறது. அதன் விளைவாக ஏற்படும் பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதே இப்படத்தின் கருவாகும்.

சமீபத்தில் வெளியாகிய மூன் நைட் தொடர் மார்வெல் ரசிகர்களால் மட்டும் அல்லாமல் பொதுவான ரசிகர்களையும் கவர்ந்துள்ள நிலையில் மோர்பியஸ் மீது ஏமாற்றம் அடைந்துள்ளதாக ரசிகர்கள் தெறிக்கின்றன. இந்நிலையில் பொதுவான ரசிகர்கள் இத்திரைப்படம் மீது இருந்த எதிர்பார்ப்பை இப்படம் முழுமையாக நிறைவு செய்யவில்லை, என்ற கருத்து நிலவுகிறது.

நீங்கள் மோர்பியஸ் திரைப்படம் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது?

மூன் நைட் அல்லது மோர்பியஸ் எது சிறந்தது?

 

Related posts