கல்விதமிழ்நாடு

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு !

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தேர்வுகள் நடத்தப்படவில்லை

10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் மார்ச் முதல் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடைந்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறைகள் அறிவிக்கப்படும். ஆனால் இந்த கொரோனா தொற்றின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படவில்லை.

பாட சுமை

இரண்டு வருடத்திற்கு பிறகு கொரோனா தொற்று குறைந்தால் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது. வழக்கத்தைவிட தாமதமாக பள்ளிகள் திறக்கபட்டதால் பாடங்களை முழுவதுமாக நடத்தி முடிக்க ஆசிரியர்கள் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. மாணவர்களுக்கும் பாட சுமை அதிகமானது. இதனால் தமிழக அரசு பாடப்பகுதிகளை குறைத்தது.

மே மாதத்தில் தேர்வு

பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் தேர்வுகளும் தள்ளிப்போயின. அதன்படி தமிழக அரசு இந்த வருடத்திற்கான 10,11, 12ம் வகுப்பு பொது தேர்வுகளை மே மாதத்தில் நடத்த முடிவு செய்தது. அதைதொடர்ந்து மே 5ம் தேதி 12ம் வகுப்புக்கும், மே 6ம் தேதி 10ம் வகுப்புக்கும் தேர்வுகள் அறிவிக்கப்பட்டனர். மேலும் 11ம் வகுப்புக்கு 10ம் தேதி பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டது.

மாஸ்க் கட்டாயம்

ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா? தேர்வு எழுதும் மாணவர்களுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் விதிக்கபடும்? என்று குழப்பத்தில் பெற்றோர்களும், மாணவர்களும் இருந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது பொதுத் தேர்வு எழுதவரும் மாணவர்களும், தேர்வு கண்காணிப்பாளர்களாக வரும் ஆசிரியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும், பள்ளி வளாகத்துக்குள் இருக்கும் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதனால் பொதுத் தேர்வுகள் எந்த காரணத்தினாலும் ரத்து செய்யப்படமாட்டாது என்று உறுதியாகியுள்ளது.

Related posts