Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 16
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»மாம்பழம் சின்னத்தை முடக்க முடியாது: ராமதாஸ் வழக்கில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

மாம்பழம் சின்னத்தை முடக்க முடியாது: ராமதாஸ் வழக்கில் தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

March 27, 20263 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

பாமக தலைவராக தன்னை அங்கீகரிக்க வேண்டும், உட்கட்சி பிரச்சினை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை, மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னதாக, ராமதாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாம்பழம் சின்னம் தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றம் விசாரித்து மூன்று நாட்களுக்குள் உத்தரவிட ஆணையிட்டது.

அதன்படி, இந்த வழக்கின் விசாரணை சென்னை 12-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தர்மபிரபு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது ராமதாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, “அன்புமணி ராமதாஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்புதான் பாமக கட்சிக்கான அங்கீகாரமே ரத்தானது. 2025-28 வரை மீண்டும் அன்புமணியை தலைவராக தேர்ந்தெடுக்க சிறப்பு நிர்வாக குழு எதிர்ப்பு தெரிவித்தது. தேர்தல் ஆணையத்துக்கும் அன்புமணி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “அன்புமணி ராமதாஸ் கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால், மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக ஆவணங்களை மோசடியாக தயாரித்து தேர்தல் ஆணையத்தை அன்புமணி ஏமாற்றியுள்ளார். இது குறித்து ஐந்து முறை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி தெரிவிக்கப்பட்டது. ஆனால் அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு என்ன இவ்வளவு ஆர்வம் என தெரியவில்லை” எனவும் அவர் வாதங்களை முன்வைத்தார்.

மேலும், “தி.நகரில் உள்ளது அன்புமணியின் வீடு, ஆனால் அதை பாமக அலுவலகமாக தேர்தல் ஆணையம் எப்படி கருதியது? அன்புமணியின் பதவிக் காலம் முடிந்தும், தேர்தல் ஆணையம் எப்படி அன்புமணியை தலைவராக ஏற்றது என தெரியவில்லை? அவர் தேர்தலில் போட்டியிடட்டும். நாங்களும் போட்டியிடுகிறோம். மக்கள் முடிவு செய்யுட்டும்” என வாதிட்டார்.

இதையும் படிக்க :  தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்! - நயினார் நாகேந்திரன்

பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா ஆஜராஜி, “இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட முறையே தவறானது. ராமதாஸ் தலைவராக உள்ளார் என்றால், ஏன் தன்னை தலைவராக அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்?” என்று வாதிட்டார்.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், “இந்த வழக்கு தந்தை – மகனுக்கு இடையே உள்ள பிரச்சினை. மாம்பழம் சின்னத்தை தற்போதைய நிலையில் முடக்க முடியாது. தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டதால், நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியாது. புதுவையில் சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டது” என்று வாதிட்டார்.

அன்புமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்ரா சம்பத் ஆஜராகி, “நிறுவனர் ராமதாஸை சிலர் தவறாக வழி நடத்துகின்றனர். இது தந்தை – மகனுக்கு இடையேயான பிரச்சினை மட்டுமே. ஆனால் அதை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர்.

பாமக பதிவு செய்யப்பட்ட கட்சியாக இருப்பதால் மாம்பழம் சின்னம் வேறு யாருக்கும் சென்று விடக் கூடாது என்பதற்காக சின்னம் பெறப்பட்டது. பாமகவுக்கு மாம்பழம் சின்னம் கிடைத்திருக்கக் கூடாது என்பதை தான் ராமதாஸ் விரும்புகிறாரா? அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்ததால் விதிகளின்படி மாம்பழம் சின்னம் யாருக்கும் ஒதுக்கப்படாது என்றாலும், இந்த முறை சின்னம் கிடைக்காமல் தேர்தலில் நின்றால் வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படும்.

இதையும் படிக்க :  சரவணனை கைது செய்யக்கோரி பாஜகவினர் புகார் !

2025 ஆகஸ்ட் மாதம் சிறப்பு பொதுக்குழு நடத்தப்பட்டு ராமதாஸ் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறுவது போலியானது. பொதுக்குழு நடத்தப்படும் என 21 நாட்களுக்கு முன் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து அதன்பின் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். அப்படி கூட்டப்பட்டதற்கான ஆதாரங்கள், ஆவணங்கள் இல்லை.

பழைய முகவரியை மாற்ற வேண்டும் என ராமதாஸ் தெரிவிப்பதில் இருந்தே, தி.நகர் அலுவலகத்தில் ஏற்கெனவே பாமக அலுவலகம் செயல்பட்டு வந்தது என்பதை ராமதாஸ் ஏற்றுக் கொள்கிறார்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் சார்பில், “அன்புமணி மற்றும் ராமதாஸ் என்ற தனி நபர்களுக்கு சின்னம் ஒதுக்கப்படவில்லை. பாமக என்ற பெயரில் மட்டுமே சின்னம் ஒதுக்கப்பட்டது. பதிவு செய்யப்பட்ட கட்சியான பாமக இலவச சின்னமான மாம்பழத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. அதனடிப்படையில் சின்னம் வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் கூட குறிப்பிட்ட பிரிவுகளை தவிர சின்னம் ஒதுக்கீடு தொடர்பான தேர்தல் ஆணையம் முடிவில் தலையிட முடியாது. 2 ஆண்டுகள் எந்த அலுவலகத்தில் இருந்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் வந்ததோ? அந்த முகவரிக்குத்தான் சின்னம் ஒதுக்கீடு செய்து கடிதம் அனுப்பப்பட்டது” என்றனர்.

இதன் தொடர்ச்சியாக, பாமக தலைவராக தன்னை அங்கீகரிக்க வேண்டும், உட்கட்சி பிரச்சினை தொடர்பான உரிமையியல் வழக்கில் தீர்வு எட்டப்படும் வரை, மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்ல இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு ஈரான் அனுமதி
Next Article ‘அம்மா’ வளர்த்த சேகர்பாபு இப்போது ‘அப்பா’வின் அடிமை: தமிழிசை விமர்சனம்

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.